அரசாங்கம் பழிவாங்கும் நோக்கில் செயற்படுகின்றது; பந்துள குணவர்தன

banthula

வெலிக்கடை சிறைசாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை சந்திப்பதற்காக மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர்.

இந்நிலையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பந்துள குணவர்தன, அரசியல் நோக்கில் பழிவாங்குவதற்காக அரசாங்கம் மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்வதாக குற்றம் சுமத்தினார்.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட பலர் தற்போதை அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்ற போதும், அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லையெனவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

banthula