மலையகத்தில் A H1N 1 வைரஸ்

121

A H1N 1 வைரஸ் தாக்கத்திற்குள்ளான ஐந்து நோயாளர்கள் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக, கண்டி வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த வைரஸினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்றைய நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வருவதாகவும், வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் டாக்டர்  சமன் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

A H1N 1 வைரஸ் தாக்கத்தின் காரணமாக கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவர் திடீரென உயிரிழந்ததை அடுத்து, அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த வாட்டு மூடப்பட்டிருந்ததுடன்,குறித்த வார்ட்டில் காணப்பட்ட வைரஸ் நீக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து மீண்டும் வார்ட் திறக்கப்பட்டது.

மேலும் இவ்வாறு திறக்கப்பட்ட வார்ட் A H 1N 1 வைரஸ் தொற்றுக்குள்ளாகும் நோயாளர்களுக்கு மாத்திரம் பயன்படுத்தப்படவுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளது.