டின் மீன் இறக்குமதியில் வீழ்ச்சி

Canned White Meat Tuna in Olive Oil

இலங்கைக்கானடின் மீன் இறக்குமதி வீழ்ச்சிநிலை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டின் மீன் இறக்குமதியானது 2015ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016 ம் ஆனது வீழ்ச்சி நிலையில் காணப்படுவதாகவும்,கடந்த ஆண்டில் 16.2 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

2015ம் ஆண்டு அரசாங்கம் டின் மீன் இறக்குமதிக்காக 788 கோடி ரூபாவை செலவிட்டிருந்த நிலையில், 2015ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 8.5 சதவீத வீழ்ச்சி நிலையாகும்.

சீனாவிலிருந்து கூடுதலான டின் மீன் இறக்குமதி செய்யப்படுவதுடன், தாய்லாந்து, சிலி, தாய்வான், ஜப்பான், யெமன், மாலைதீவு போன்ற நாடுகளிலிருந்தும் டின் மீன் இறக்குமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது