ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான ஏல விற்பனை ஒத்தி வைப்பு

IPL-tamilfast.lk

10 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான ஏல விற்பனை பெப்ரவரி மாதம் இறுதி வாரத்துக்கு ஓத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் 4 ஆம் திகதி பெங்களூரில் நடைபெறவிருந்தது.

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம் பெப்ரவரி 20 ஆம் திகதி அல்லது 25 ஆம் திகதி நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும் ஏப்ரல் 5 ஆம் திகதி ஐ.பி.எல். தொடர் ஆரம்பிக்கப்படும் என புதிய நிர்வாக குழு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

ஆனால், அண்மையில் கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்க வினோத்ராய் தலைமையில் 3 பேர் கொண்ட புதிய நிர்வாக குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.