ரஷ்யாவின் பதக்கம் பறிமுதல்

25

லண்டனில் 2012ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 400 மீற்றர் அஞ்சலோட்டத்தில் ரஷ்ய பெண்கள் அணி வென்ற வெள்ளிப்பதக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த போட்டியில் அன்டோனியா கிரிவோஷப்கா என்ற ரஷ்ய வீராங்கனை ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதால் ரஷ்ய அணிக்கு வழங்கப்பட்ட வெள்ளிப்பதக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 400 மீற்றர் அஞ்லோட்டத்தில் ரஷ்ய பெண்கள் அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. இந்த அணியில் இடம் பெற்று இருந்த 4 வீராங்கனைகளின் இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரி மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதில் அன்டோனியா கிரிவோஷப்கா என்ற வீராங்கனை ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரஷ்ய அணிக்கு வழங்கப்பட்ட வெள்ளிப்பதக்கத்தை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் பறிமுதல் செய்துள்ளது.