சாம்சங் கேலக்ஸி S8 (samsung galaxy-S8) புகைப்படம் வெளியானது

000

சாம்சங்கின் கம்-பேக் தொலைபேசியாக , ஸ்மார்ட் போன் சந்தையில் கூறப்படுவது ‘சாம்சங் கேலக்ஸி S8’ (samsung galaxy-S8).

சாம்சங் நிறுவனம், தனது ‘நோட் 7’ தொலைபேசிகள் , பயன்படுத்திக் கொண்டிருக்கும்போதே வெடித்தது என்ற காரணத்தால் ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கு இருந்த இடத்தை மற்ற நிறுவனங்களிடம் இழந்தது.

இந்நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி ‘சாம்சங் கேலக்ஸி S8’ (samsung galaxy-S8) தொலைபேசியை நியூயார்க்கில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் வெளியிடுகிறது

ஏற்கெனவே S8 தொலைபேசியை பற்றிய பல தகவல்களும் யூகங்களும் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தற்போது S8-ன் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.