தரம் உயர்த்தப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்

Sri_Lanka_Cricket_

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான சீக்குகே பிரசன்ன மற்றும் அசேல அசேல குணரத்னவிற்கு இலங்கை இராணுவத்தில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மகாநாட்டில் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன இந்த பதவியுயர்வு குறித்து குறிப்பிட்டுள்ளார்.

சீக்குகே பிரசன்ன, இராணுவத்தின் வொரன்ட் அதிகாரி தரம் ஒன்றிலும், அசேல குணரத்ன, வொரன்ட் அதிகாரி தரம் இரண்டு பதவிலுமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.