வீர வீராங்கனைகள் நேர்மையாக போட்டியில் பங்கேற்பதில்லை-மைக்கல்

01

போட்டிகளில் பங்கேற்கும் வீர வீராங்கனைகள் அனைவரும் நேர்மையாக பங்கேற்பதில்லை என, உலகின் முன்னணி நீச்சல் வீரரான, மைக்கல் பெல்ப்ஸ் தெரிவித்துள்ளார்.

போட்டிகளில் பங்கேற்கும் சக வீரர்கள் மோசடியான முறையில் போட்டியிடுவதாகவும், தன்னுடன் போட்டியிட்டவர்கள் அனைவரும் நேர்மையாக போட்டியிட்டார்கள் என தான் கருதவில்லை எனவும், மைக்கல் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க காங்கிரஸ் சபையினர் முன்னிலையில், ஊக்க மருந்துப் பயன்பாட்டு தடை குறித்து சாட்சியமளித்த போது அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.