மனித நினைப்பில் கட்டுப்படுத்த கூடிய ரோபோ

00

மனித செயற்பாடுகளை இலகுவாக்குவதற்கு இயந்திரங்களையும், ரோபோக்களையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள நிலையில் இவற்றிற்கான கட்டளைகளை வழங்குவதற்கு மனித உழைப்பு அவசியப்படுகின்றது.

இருப்பினும் எதிர்காலத்தில் அதனையும் குறைப்பதற்கான முயற்சிகள் தற்போதிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக மனித மூளையில் உருவாக்கப்படும் அலைகளை உணர்ந்து செயற்படக்கூடிய ரோபோக்களை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

இதனால் இருந்த இடத்திலிருந்தே தமது எண்ணங்களால், ரோபோக்களுக்கு மனிதர்கள் கட்டளை இட முடியும், என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனை எம்.ஐ.டி நிறுவனத்தின் கணிப்பொறி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கூடம் ஆராய்ச்சியாளர்களே வடிவமைத்துள்ளனர்.

இந்த ரோபோவை அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்த ரோபோ, குழப்பமான சூழ்நிலையில் தனது சந்தேகங்களை, புத்திசாலி தனமான கேள்விகளாக கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

g