இலங்கை- பங்களாதேஷ் டெஸ்ட் போட்டி இடைநிறுத்தம்

1

இலங்கை- பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

காலியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இன்றைய நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

போட்டியின் மூன்றாவது நாளான இன்று, இரண்டு விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களுடன் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி, சகல விக்கட்டுக்களையும் இழந்து 312 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதன்போது, பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர் முஷ்பிகுர் ரஹீம் 85 ஓட்டங்களையும், செளம்யா சர்கார் 71 ஓட்டங்களையும் பெற்றனர்.

தில்ருவன் பெரேரா 53ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை, ரங்கன ஹேரத் 72 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சிற்காக சகல விக்கட்டுக்களையும் இழந்து 494 ஓட்டங்களை பெற்றது.

குசல் மெண்டிஸ் 194 ஓட்டங்களையும், அசேல குணரத்ன 85 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பிக்கவிருந்த நிலையில், மழை காரணமாக போட்டி, இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.