பிரான்ஸ் பாடசாலையில் துப்பாக்கி பிரயோகம் : இருவருக்கு காயம்

gun 2

பிரான்ஸ் நாட்டின் தெற்கே உள்ள கிராசே (Grasse) எனும் ஊரில் உள்ள பாடசாலையில், மாணவர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

குறித்த மாணவரின் இந்தத் திடீர் தாக்குதலுக்கு என்ன காரணம் என்பது பற்றி இதுவரை எந்தத் தகவலும் வெளிவரவில்லை.

இந்த சம்பவத்தில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும்,எவ்வித உயிரிழப்பு ஏற்படவில்லையெனவும் பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவரை பிரான்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.