வெள்ளை மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

11

வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளை மாளிகைக்கு அருகே உள்ள சோதனை சாவடியில் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் காரில் வேகமாக வந்துள்ளார்.

இதன் போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மர்ம நபரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அவர் வெள்ளை மாளிகைக்கு வெடி குண்டு வைக்கபோவதாக தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக வெள்ளை மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.