வடகொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வி

01

வடகொரியா நடத்திய புதிய ஏவுகணை சோதனை தோல்வியடைந்ததுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வடகொரியாவின் கல்மா எனும் இடத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்த ஏவுகணை சோதனை பற்றி தென்கொரிய பாதுகாப்புத் துறை சார்பில், தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில், வடகொரியா ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தி இருந்தது.

மேலும் நீண்ட தொலைவில் பாயும் ஏவுகணை சோதனைகளையும் நடத்தியது.

இதற்கு ஐ.நா. சபையும் உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.