சீன தங்கச்சுரங்கங்களில் விஷவாயு : 10பேர் பலி

hu

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் லிங்காபோ நகரில் உள்ள குயின்லிங் தங்கச் சுரங்கத்தில் திடீரென கார்பன் மோனாக்சைட் விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது.

இந்த விஷவாயுவில் சிக்கி மூச்சுத் திணறி 8 தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை குயின்லிங் தங்கச் சுரங்கத்திற்கு அருகாமையில் உள்ள மற்றொரு சுரங்கத்திலும் இத்தகைய விஷவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது.

இதன்போது குறித்த சுரங்கத்தில் பணியில் ஈடுபட்ட 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் பல்வேறு நிலக்கரி மற்றும் தங்க சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்ற நிலையில், இவற்றில் சில சுரங்கங்கள் மட்டுமே உரிய முன்அனுமதி பெற்றும், முறையான பாதுகாப்பு அம்சங்களுடனும் செயல்படுகின்றன.

மேலும் பல சுரங்கங்கள் முன்அனுமதி இல்லாமலும், பாதுகாப்பு அம்சங்கள் எதுவுமின்றி ஆபத்தான சூழலிலும் இயங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.