ஜப்பானில் பனிச்சரிவு: 8 பேர் பலி

japan

ஜப்பானில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்குண்டு 8 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டோக்கியோவில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டோச்சிகி மாவட்டத்தில் அமைந்துள்ள பனி படர்ந்த மலையில், ஏறுவதற்காக பல்வேறு இடங்களைச்சேர்ந்த 60 மாணவர்கள் சென்றுள்ளனர்.

குறித்த மாணவர்கள் நாஸூ எனும் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த போது, திடீர் என பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 8 மாணவர்களின் சடலங்கள்  மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக நாஸு நகரில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.