பார்க் குவென் கைது

1-6

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் குவென் ஹை கைது செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

65 வயதான முன்னாள் ஜனாதிபதி, நீதிமன்ற உத்தரவின் படி கைது செய்யப்பட்டு, சியோலில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

குவென் ஹையின் நண்பியான சோய் சூன் சில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இவர் ஜனாதிபதி குவென் ஹையுடனான நெருக்கத்தை வைத்து, ஊழல்களில் ஈடுபட்டதாகவும், அரசுப் பணி நியமனங்களில் தலையிட்டதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கைது செய்யப்படும் தென்கொரியாவின் மூன்றாவது முன்னாள் ஜனாதிபதியாக பார்க் குவென் காணப்படுகிறார்.

White

தென் கொரிய ஜனாதிபதியை கைது செய்யுமாறு கோரிக்கை