இலங்கைக்கு செல்லாதீர்கள் கட்டார் அரசு

0

இலங்கைக்கு சுற்றுலா பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என கட்டார் நாட்டின் வௌிவிவகார அமைச்சினால், அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் பரவி வரும் H1N1 வைரஸ் நோய்த் தொற்றின் காரணமாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையில் பெரும் தொகையானவர்கள் இந்த வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.