அஸ்வினின் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா

SJ Surya @ Puli Audio Release Function Stills

நயன்தாரா நடிப்பில் வெளிவந்த திகில் திரைப்படமான மாயா திரைப்படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன், தனது அடுத்த திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவை நடிக்க வைக்கவுள்ளாராம்.

இந்தப் படத்திற்கு ‘இறவாக்காலம்’ என்று பெயர் வைத்துள்ளனர்.

எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக ஷிவதா, வாமிகா காஃபி ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த திரைப்படத்திற்கு ரான் யத்தன் யோகான் என்பவர் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் குறித்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

விரைவில் இப்படம் குறித்து மேலும் புதிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.