பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

article_1464140721-Pillayan-12

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையானின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கானது இன்று மட்டக்களப்பு நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது இந்த கொலை தொடர்பில் கைதான பிள்ளையான் மற்றும் மூன்று பேரையும் எதிர்வரும் மாதம் 12ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டடு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.