பட்டாசு தொழிற்சாலையில் வெடிப்பு

Web _Bomb_Blast_tamilfast

கிம்புலாபிடிய – தாகொன்ன பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று மதியம் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் காயமடைந்தவர் நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிப்புக்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை.