தல போல வருமா

0

முதல் முறையாக ஒரு நடிகருக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் சமர்ப்பணம் செய்யும் விதமாக, ஒரு படம் உருவாகி வருகிறது.

இந்த திரைப்படத்தின் பெயர், ‘தல போல வருமா.

இதுவரை குடும்பங்கள், இராணுவம், காவல் துறை, காதலர்கள் போன்றவர்களுக்காக சமர்ப்பணம் செய்யப்பட்ட திரைப்படங்கள் பலவற்றை ரசிகர்கள் பார்த்து இருப்பார்கள்.

இந்த படம் அஜித் மற்றும் அவருடைய ரசிகர்களுக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக தயாராகி வருகிறது.

புதுமுகம் கே.எம்.தேஜஸ், ‘யாருடா மகேஷ்’ பட புகழ் டிம்பிள் சோப்ரா ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.