சட்டவிரோதமான சிகரெட்டுக்களுடன் பெண் ஒருவர் கைது

cigarettes

சட்டவிரோதமான சிகரெட்டுக்களுடன் வெளிநாட்டு பெண் ஒருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் குறித்த பெண் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயில் இருந்து இலங்கை வந்துள்ள குறித்த பெண்ணிடம் இருந்து, 200 வரையிலான சிகரட் தொகைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளுக்காக குறித்த பெண் விமான நிலைய சுங்க பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.