மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது

crime-arrest

குச்சவௌி- வடகாமலை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புல்மோட்டை முகாம் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைதானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது உழவு இயந்திரம் ஒன்றும், மணல் அல்லுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக குச்சவௌி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.