கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம்

0

சவூதி அரேபியாவில் இருந்து இந்தோனேஷியா வரை பயணித்த விமானம் ஒன்று திடீர் என கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

குறித்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் திடீர் என சுகையினம் அடைந்ததன் காரணமாக இவ்வாறு விமானம் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுகையீனமுற்ற பயணி, 75 வயதுடைய இந்தோனேஷியா நாட்டை சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.

குறித்த நபரை நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.