வெளிநாட்டு பிரஜைகள் உயிரிழப்பு

dead

ஹிக்கடுவை-நாலாகஸ்தெனிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த வௌிநாட்டு பிரஜை ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் 73 வயதுடைய பிரித்தானிய பிரஜை என தெரியவந்துள்ளது.

இதேவேளை தெமட்டகொடை, மஹவல ஒழுங்கை பிரதேசத்தில், வீதியில் விழுந்திருந்த 40 வயதுடைய, சீனப் பிரஜை ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார்.