பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு

01

பொலிஸ் சேவைக்கு புதிய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

பொலிஸ் அதிகாரிகளில் , பெண் அதிகாரிகள், சாரதி உள்ளிட்ட பதவிகளுக்கு 5,500 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்த ஆட்சேர்ப்பில், தமிழ் பேசும் விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அவர்களை வடக்கு, கிழக்கிலுள்ள பொலிஸ் நிலையங்களில் சேவையில் அமர்த்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 2 ம் திகதி வரை குறித்த ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.