வல்லப்பட்டைகளுடன் இந்தியப் பிரஜைகள் கைது

arresd

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஒரு தொகை வல்லப்பட்டைகளுடன் இரண்டு இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை நோக்கி புறப்படுவதற்காக வந்திருந்த இந்தியப் பிரஜைகள் இரண்டு பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக விமான நிலைய சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் தர்மசேன கஹந்தவ தெரிவித்துள்ளார்.

குறித்த நபர்களின் பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 கிலோ கிராம் வல்லப்பட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றின் பெறுமதி சுமார் 20 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைப்பற்றப்பட்ட வல்லப்பட்டைகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட இருவரிடமும் தண்டம் அறவிடப்பட உள்ளது.