உலர்ந்த கஞ்சாவை வைத்திருந்த 6 பேர் கைது

011

தனமல்வில–எம்பிலிபிட்டிாயன பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் உலர்ந்த கஞ்சாவை வைத்திருந்த 6 பேரை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

இதன்போது குறித்த நபர்களிடம் இருந்து 18 கிலோகிராம் உலர்ந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தனமல்வில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.