வெளிநாட்டு நாணயங்களுடன் இருவர் கைது

1

வெளிநாட்டு நாணயங்களுடன் 2 இந்திய நாட்டு பிரஜைகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து 14 நாடுகளின் நாணயங்கள் மீட்கப்பட்டதாக சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை கைது செய்யப்பட்ட குறித்த 2 பேரையும் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த நபர்களிடம் இருந்து 12 கோடி பெறுமதியான நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.