குழந்தையுடன் ஆற்றில் குதித்த தாய்

0

கடுவலை பாலத்திற்கு அருகில் பெண் ஒருவர் தனது 6 வயது குழந்தையுடன் ஆற்றில் குதித்துள்ள நிலையில், குறித்த பெண் காப்பாற்றப்பட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையின் குறித்த பெண்ணின் குழந்தை ஆற்றில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாலத்தின் சுவரில் பாரியளவில் இரத்தக்கரைகள் இருப்பதால் குழந்தை ஆற்றில் குதிக்கும் முன்னரே உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பியகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.