யாழில் ஆசிரியர் சங்கத்தின் மே தினம்

00

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மே தின ஊர்வலம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிபர், ஆசிரியர் பிரச்சினை உள்ளிட்ட, கல்வித் துறையிலுள்ள சிக்கல்கள் மற்றும் வடக்கு பகுதியில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தர அழுத்தம் கொடுக்கும் நோக்கில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த ஊர்வலத்திற்கு, யாழ் பல்கலைக்கழகத்தின் கல்விச் சேவை சங்கம் உள்ளிட்ட 6 அமைப்புக்கள் ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளதாக , தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய, குறித்த ஊர்வலம் நாளை காலை 10.00 மணிக்கு யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, யாழ் நகர் ஊடாக சென்று மீண்டும் பல்கலைக்கழகப் பகுதிக்கு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.