இலங்கை அரசியலின் மே தினம்

may day

கொழும்பு, யாழ்ப்பாணம், அம்பாறை, கிளிநொச்சி மற்றும் கண்டி ஆகிய பல பகுதிகளிலும், மே தின ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்களுக்கு அரசியல் காட்சிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இலங்கையின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின பேரணி பொரல்லை கெம்பல் மைதானத்தில் நடைபெறுகிறது.

மேலும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினப் பேரணி கண்டி – கெடம்பே மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

இதேவேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி காலி முகத்திடலில் தமது மே தின நிகழ்வுகளை நடைபெறுகின்றது.

மேலும் , தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இவ்வாண்டின் மே தினம் வட மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்திலும் நிகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.