கஞ்சாவுடன் மூவர் கைது

kanja

பண்டாரகம – வெவிட வெவ பிரதேசத்தில் கஞ்சாவுடன் 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில், காரொன்றில் கொண்டு செல்ல தயாராக வைக்கப்பட்டிருந்த போது குறித்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது 6 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், பிலியந்தலை, பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 22, 23, மற்றும் 24 வயதான இளைஞர்கள் மூவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.