மஹியங்கனை விபத்தில் ஒருவர் பலி 11 பேருக்கு காயம்

accident45611-09-1473414628

மஹியங்கனை பிபில வீதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 11 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்வாறு காயமடைந்த 11 பேர் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் லக்சிரிகம – செவனகல பகுதியைச் சேர்ந்த 64 வயதான பெண் ஒருவர் பலியானார்.

அத்துடன் காயமடைந்த ஏனையவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக மொணராகலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ரிதிமொலியத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.