மோதரையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Gun Web

மோதரை பிரதேசத்தில் அனுமதி பத்திரமின்றி கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபரிடம் இருந்து துப்பாக்கி ரவைகளும், மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட நபர் பயாகல பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.