இந்திய மீனவர்கள் 5 பேர் கைது

crime-arrest

இந்தியாவின் இராமேஸ்வரம்-பாம்பனில் இருந்து, படகில் மீன்பிடிக்க சென்ற, தங்கச்சி மடத்தை சேர்ந்த 5 மீனவர்களை, இலங்கை படையினர் கைதுசெய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த மீனவர்களை தற்போது மன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்க பிரதிநிதிகள் கூறியுள்ளதாக, இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.