பாதையில் மீட்க்கப்பட்ட சடலம்

dead-body-jpg1

நல்லத்தண்ணி-வாழமலை பிரதேசத்தில் பாதையில் இருந்து சடலம் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் வாழமலை பிரதேசத்தை சேர்ந்த எச்.எம். லலித் எனும் 42 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவருடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 1 மணியளவில் இரு குழுக்களுக்கு இடையிலான மோதலில் குறித்த நபர் கல்லால் தாக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் நல்லத்தண்ணி பிரதேசத்தில் வியாபாரம் செய்து வருபவர் எனவும், குழு மோதலில் தாக்குதலுக்கு இழக்காகி உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது.