சிறிகொத்தயில் துப்பாக்கி பிரயோகம்:சந்தேக நபர் கைது

011

ஐக்கிய தேசிய கட்சியின் சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக கருதப்படும் பொலிஸ் அதிகாரி ஒருவர் மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று மாலை கட்சி தலைமையகத்தின் அருகில் இருந்து குறித்த அதிகாரி அனாவசியமாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.