01

வீடு வாங்கிய அமலா

நடிகை நயன்தாரா சென்னை நகரில் ஒரு ஆடம்பர அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்கிஇருந்தார். இந்த நிலையில் அவரை போல், அமலாபாலும் சென்னை நகரில் ஒரு ஆடம்பர அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்கியிருக்கிறார். அதன் மதிப்பு, சில கோடிகள் என தெரியவந்துள்ளது.


0

சிரிஷ்காக சிம்பு

மெட்ரோ’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான சிரிஷ் தற்போது, ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை தரணிதரன் இயக்குவதுடன்,யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். ‘‘நான் யாருன்னு தெரியுமா?’’ என்று சிரிஷ் பாடுவது போன்ற ஒரு பாடல் காட்சி, படத்தில் இடம் பெறுகிறது. இந்த பாடலை சிரிசுக்காக சிம்பு பாடியுள்ளார்.


00

சூரியுடன் நடிக்க மறுத்த நயன்

சூரியை ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது. அந்த படத்தில், சூரிக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைப்பது என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் நயன் நடிக்க முடியாது’’ என்று ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைத்து விட்டாராம்.


0

தல போல வருமா

முதல் முறையாக ஒரு நடிகருக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் சமர்ப்பணம் செய்யும் விதமாக, ஒரு படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் பெயர், ‘தல போல வருமா. இதுவரை குடும்பங்கள், இராணுவம், காவல் துறை, காதலர்கள் போன்றவர்களுக்காக சமர்ப்பணம் செய்யப்பட்ட திரைப்படங்கள் பலவற்றை ரசிகர்கள் பார்த்து இருப்பார்கள். இந்த படம் அஜித் மற்றும் அவருடைய ரசிகர்களுக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக தயாராகி வருகிறது. புதுமுகம் கே.எம்.தேஜஸ், ‘யாருடா மகேஷ்’ பட புகழ் டிம்பிள் சோப்ரா ஆகிய இருவரும் முக்கிய Continue reading


SJ Surya @ Puli Audio Release Function Stills

அஸ்வினின் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா

நயன்தாரா நடிப்பில் வெளிவந்த திகில் திரைப்படமான மாயா திரைப்படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன், தனது அடுத்த திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவை நடிக்க வைக்கவுள்ளாராம். இந்தப் படத்திற்கு ‘இறவாக்காலம்’ என்று பெயர் வைத்துள்ளனர். எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக ஷிவதா, வாமிகா காஃபி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கு ரான் யத்தன் யோகான் என்பவர் இசையமைக்கிறார். இந்த நிலையில் குறித்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்து மேலும் புதிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Woman holding gift box, cropped

இயக்குனருக்கு கிடைத்த பரிசு

அண்மையில் திரைக்கு வந்த ‘8 தோட்டாக்கள்’ திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பு அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இதன் காரணமாக எம்.எஸ்.பாஸ்கருக்கு பாராட்டுகள் குவிந்தன. தன் நடிப்பை வெளிக்கொண்டுவர காரணமாக இருந்த இயக்குனர் ஸ்ரீகணேசை, எம்.எஸ்.பாஸ்கர் வீட்டுக்கு அழைத்து, அவருக்கு தங்க சங்கிலி அணிவித்து வாழ்த்தியுள்ளார்.


0

கவர்ச்சியாக நடிக்க தயார்-ஸ்ரீ

நடிகை ஸ்ரீ திவ்யா  பிரபல நாயகிகளுக்கு போட்டியாக வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்த வேளையில், அவர் ‘மார்க்கெட்’டை கோட்டை விட்டார். அவருக்கு பட வாய்ப்புகள் வருவது குறைந்தன. தவற விட்ட ‘மார்க்கெட்’டை திரும்ப பிடிப்பதற்காக, அவர் கவர்ச்சிக்கு மாற முடிவு செய்து இருக்கிறாராம். இதற்காக தன்னை விதம் விதமாக புகைப்படம் எடுத்து பிரபல தயாரிப்பாளர்கள் மற்றும் டைரக்டர்களுக்கு அனுப்பி வருகிறாராம்.


01

ஹிந்திக்கு செல்லும் நயன்

‘நம்பர்–1’ நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹிந்தி திரை உலகிற்கு உள்வாங்க்க்கப்படவுள்ளார். நயனின் சம்பளம் படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போகிறது. இப்போது அவர் ஒரு படத்துக்கு 4 கோடி ருபாய் வாங்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய ‘மார்க்கெட்’ நிலவரத்தைப் பார்த்து வியந்து போன ஒரு ஹிந்தி பட அதிபர்,நயனை ஹிந்தி பட உலகுக்கு கொண்டு போகும் முயற்சியில், மிக தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்.


00

கொலையுதிர் காலம்

கொலையுதிர் காலம் எனும் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிவருகின்றது. இந்த திரைப்படத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் கதாநாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். ஹிந்தியில் இந்த திரைப்படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் ஹிந்தியில் தமன்னா கதாநாயகியாக நடிப்பதுடன், பிரபுதேவா வில்லனாக நடிக்கிறார்.


0

இயக்குனராகும் நித்யா

விஜய்யின் 61வது படத்தில் 3 கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார் நித்யா மேனன். இவர் விரைவில் ஒரு படத்தை இயக்கவுள்ளாராம். இந்த திரைப்படத்தை மலையாளம், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார் நித்யா. குறித்த படத்திற்கான கதை, திரைக்கதை, வசனத்துடன் அவர் தயாராக இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.