201503220448526180_Dindigul-in-the-accident-including-the-woman-caught-in-the_SECVPF-720x480

சம்மாந்துறை விபத்தில் மூதாட்டி பலி

சம்மாந்துறை – அக்கரைப்பற்று வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் பாதையை கடக்க முற்பட்ட போது, மோட்டார் சைக்கிள் மோதி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் 72 வயதான மூதாட்டி என தெரியவந்துள்ளது. குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


011

சிறிகொத்தயில் துப்பாக்கி பிரயோகம்:சந்தேக நபர் கைது

ஐக்கிய தேசிய கட்சியின் சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக கருதப்படும் பொலிஸ் அதிகாரி ஒருவர் மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று மாலை கட்சி தலைமையகத்தின் அருகில் இருந்து குறித்த அதிகாரி அனாவசியமாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


dead-body-jpg1

பாதையில் மீட்க்கப்பட்ட சடலம்

நல்லத்தண்ணி-வாழமலை பிரதேசத்தில் பாதையில் இருந்து சடலம் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் வாழமலை பிரதேசத்தை சேர்ந்த எச்.எம். லலித் எனும் 42 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவருடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை 1 மணியளவில் இரு குழுக்களுக்கு இடையிலான மோதலில் குறித்த நபர் கல்லால் தாக்கப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் நல்லத்தண்ணி பிரதேசத்தில் வியாபாரம் செய்து வருபவர் எனவும், குழு மோதலில் தாக்குதலுக்கு இழக்காகி உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது.


crime-arrest

இந்திய மீனவர்கள் 5 பேர் கைது

இந்தியாவின் இராமேஸ்வரம்-பாம்பனில் இருந்து, படகில் மீன்பிடிக்க சென்ற, தங்கச்சி மடத்தை சேர்ந்த 5 மீனவர்களை, இலங்கை படையினர் கைதுசெய்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த மீனவர்களை தற்போது மன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்க பிரதிநிதிகள் கூறியுள்ளதாக, இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


Gun Web

மோதரையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

மோதரை பிரதேசத்தில் அனுமதி பத்திரமின்றி கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபரிடம் இருந்து துப்பாக்கி ரவைகளும், மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட நபர் பயாகல பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.


accident45611-09-1473414628

மஹியங்கனை விபத்தில் ஒருவர் பலி 11 பேருக்கு காயம்

மஹியங்கனை பிபில வீதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 11 பேர் காயமடைந்துள்ளனர். இவ்வாறு காயமடைந்த 11 பேர் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் லக்சிரிகம – செவனகல பகுதியைச் சேர்ந்த 64 வயதான பெண் ஒருவர் பலியானார். அத்துடன் காயமடைந்த ஏனையவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக மொணராகலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ரிதிமொலியத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


kanja

கஞ்சாவுடன் மூவர் கைது

பண்டாரகம – வெவிட வெவ பிரதேசத்தில் கஞ்சாவுடன் 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில், காரொன்றில் கொண்டு செல்ல தயாராக வைக்கப்பட்டிருந்த போது குறித்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது 6 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், பிலியந்தலை, பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 22, 23, மற்றும் 24 வயதான இளைஞர்கள் மூவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


01

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினப் பேரணி

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினப் பேரணி கண்டி – கெடம்பே மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. குறித்த பேரணியில் கலந்து கொள்வதற்காக கண்டி-தெய்யன்னாவளை மைதானத்தில் இருந்து ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் கெடம்பே மைதானத்தை நோக்கி ஊர்வலமாக செல்கின்றனர். வீடியோ


may day

இலங்கை அரசியலின் மே தினம்

கொழும்பு, யாழ்ப்பாணம், அம்பாறை, கிளிநொச்சி மற்றும் கண்டி ஆகிய பல பகுதிகளிலும், மே தின ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்களுக்கு அரசியல் காட்சிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இலங்கையின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின பேரணி பொரல்லை கெம்பல் மைதானத்தில் நடைபெறுகிறது. மேலும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினப் பேரணி கண்டி – கெடம்பே மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இதேவேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி காலி முகத்திடலில் தமது மே தின நிகழ்வுகளை நடைபெறுகின்றது. Continue reading


0

சர்வதேச தொழிலாளர் தினம்

உலகளாவிய ரீதியில் இன்றைய தினம் சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகின்றது. 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதன்போது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. இதுவே தொழிலாளர்த்தினத்தின் ஆரம்பமாக காணப்பட்டது. இதேவேளை 1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக Continue reading