0

சர்வதேச தொழிலாளர் தினம்

உலகளாவிய ரீதியில் இன்றைய தினம் சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகின்றது. 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதன்போது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. இதுவே தொழிலாளர்த்தினத்தின் ஆரம்பமாக காணப்பட்டது. இதேவேளை 1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக Continue reading


0

மலேரியாவை தடுக்க தடுப்பூசி

மலேரியா நோயை தடுப்பதற்கான தடுப்பூசியை உலக சுகாதார ஸ்தாபனம் அறிமுகப்படுத்தவுள்ளது. ஆபிரிக்க கண்டத்திலுள்ள கானா, கென்யா, மாலாவி ஆகிய மூன்று நாடுகளுக்கு அடுத்த வருடம் குறித்த மலேரியா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. குறித்த தடுப்பூசியை நான்கு தடவைகள் ஏற்றுவதன் மூலம் மலேரியா நோயிலிருந்து முழுமையான பாதுகாப்பு பெறலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.


0

உலக காசநோய் தினம்

சர்வதேச ரீதியில் இன்றைய தினம் உலக காசநோய் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த வருடம் ‘ஒன்றுசேர்வோம் காசநோயை ஒழிப்போம்’ என்ற தொனிப்பொருளில் நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. காசநோய் தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேசிய காசநோய் தினத்துக்கான நிகழ்ச்சி களுத்துறை மாவட்டத்தில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு இலங்கையில் 8,800ற்கு மேற்பட்ட காசநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், 648 பேர் உயிரிழந்துள்ளதாக காசநோய் தடுப்பு இயக்கத்தின் பணிப்பாளர் டொக்டர் காந்தி ஆரியரத்ன Continue reading


0

உலகின் தலைசிறந்த நகரம்

உலகில் தலை சிறந்த நகரமாக ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னா (Vienna) நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது. மெர்சர் நிறுவனம், உலகின் தலைசிறந்த நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதற்கமைய மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை வழங்கும் நகராக வியன்னா முதலிடம் பெற்றுள்ளது. வியன்னா நகரமானது தொடர்ந்து 8வது முறையாக மெர்சர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நிலையில் ஆசிய நகரான சிங்கப்பூர், 25வது இடத்திலும், அமெரிக்க நகரான சான் பிரான்சிஸ்கோ  29வது  இடத்திலும்  உள்ளது.


000

உலகில் அழகான திருநங்கை

உலகில் அழகான திருநங்கையாக தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஜிராட்சையை சிறிமொங்கோலினாவின் ( Jiratchaya Sirimongkolnawin) என்பவர் பட்டம் பெற்றுள்ளார். உலகளாவிய ரீதியில் அழகான திருநங்கைகளை தெரிவு செய்யும் நிகழ்ச்சி தாய்லாந்து நாட்டில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமெரிக்கா, பிரேசில், மெக்ஸிகோ, ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த திருநங்கைகள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த Jiratchaya Sirimongkolnawin என்பவர் ‘உலகிலேயே அழகான திருநங்கை(Miss International Transgender Queen) என்ற பட்டத்தை Continue reading


00

2017ம் ஆண்டிற்கான சிறந்த நாய்

இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில், கிரஃப்ட்ஸ் நாய் கண்காட்சி (Britain’s Crufts dog show) நடைபெற்றுள்ளது. இந்த கண்காட்சியானது 1891ம் ஆண்டு முதல், நடைபெற்று வருகிறது. பல நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான நாய்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டுள்ளன. இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த மியாமி எனும் ’காக்கர் ஸ்பானியல்’ ரக நாய், இந்த ஆண்டுக்கான சிறந்த நாய்க்கான பட்டத்தைத் தட்டிச்சென்றதுள்ளது.


00

மனித நினைப்பில் கட்டுப்படுத்த கூடிய ரோபோ

மனித செயற்பாடுகளை இலகுவாக்குவதற்கு இயந்திரங்களையும், ரோபோக்களையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள நிலையில் இவற்றிற்கான கட்டளைகளை வழங்குவதற்கு மனித உழைப்பு அவசியப்படுகின்றது. இருப்பினும் எதிர்காலத்தில் அதனையும் குறைப்பதற்கான முயற்சிகள் தற்போதிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மனித மூளையில் உருவாக்கப்படும் அலைகளை உணர்ந்து செயற்படக்கூடிய ரோபோக்களை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். இதனால் இருந்த இடத்திலிருந்தே தமது எண்ணங்களால், ரோபோக்களுக்கு மனிதர்கள் கட்டளை இட முடியும், என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை எம்.ஐ.டி நிறுவனத்தின் கணிப்பொறி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கூடம் Continue reading


2

சர்வதேச மகளீர் தினம்

சர்வதேச மகளீர் தினம் வருடம் தோறும் மார்ச் 8ம் திகதி உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாக காணப்படுகின்றது. 1789ம் ஆண்டு ஜூன் 14ம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, Continue reading


01

மெஸ்சேன்ஜ்ரில் (Messenger) அறிமுகமான டிஸ்லைக் (Dislike)

வெகு நாட்களாக முகப்புத்தகத்தில் எதிர்பார்க்கப்பட்ட விடயமான டிஸ்லைக் (Dislike) விருப்ப தெரிவுவானது தற்பொழுது மெஸ்சேன்ஜ்ரில் (Messenger) அறிமுகமாகியுள்ளது. உலக அளவில் 100 கோடி பேர் மெஸ்சேன்ஜர் (Messenger) பயன்படுத்துகிறார்கள். மெஸன்ஜரில் இந்த ‘டிஸ்லைக்’ விருப்ப தெரிவு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே முகப்புத்தக நிறுவனம், முகப்புத்தகத்தில் இந்த தெரிவை கொடுக்கும் என ஏதிர்பார்க்கப்படுகின்றது. மக்களின் விருப்பத்தை தெரிந்து அதை முழுமைப்படுத்த முகப்புத்தக நிறுவனம் புதிய விடயங்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடப்படுகின்றது.


0000

செவ்வாயில் எளிது புவியில் கடினம்- நாசா

நாசா செவ்வாய் கிரகத்துக்கான “மாவேன்” செயற்கைக்கோளை செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் ஈடுபடுத்தியுள்ளது. இந்த செயற்கைக்கோளின் திசைவேகத்தை நொடிக்கு 0.4 மீட்டர் அதிகரித்துள்ளது. இந்த மாற்றத்தை செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையில் செய்வது எளிது எனவும்,இதேபோன்ற ஒரு விஷயத்தை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் செய்வது கடினம் என்று கூறியுள்ளது. இதன் மூலம் மணிக்கு கூடுதலாக ஒரு மைல் தூரம் பயணிக்க முடியும் எனவும்,செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை குறைவாகவும், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்க்கை அதிகமாகவும் காணப்படுவதாகா நாசா தெரிவித்துள்ளது. இதனால் Continue reading