unnamed

தொழில் நுட்ப ஆய்வு கூட திறப்பு விழா

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் ஊடாக உலக வங்கி மற்றும் அவுஸ்திரேலியா நாட்டின் நிதி உதவியுடன் வ/கனகராயங்குளம் மகா வித்தியாலயத்தில் வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வு கூடம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கே.காதர் மஸ்தான் அவர்களின் அழைப்பின் பேரில் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ பைசர் முஸ்தபா அவர்களால் இன்று (19/01/2017) திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள் அமைச்சின் செயலாளர்கள் , பாடசாலை நிர்வாகத்தினர் மற்றும் மாணவர்களும் Continue reading


இடியப்பம்

இடியப்பம் ஒன்று 25 ரூபா ! இலங்கையில்

இலங்கையில் ஒரு இடியப்பம் 25 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. நத்தார் தினமான நேற்று, வெலிப்பன்ன பிரதேசத்தில் இவ்வாறான விற்பனை இடம்பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதிவேக வீதி வழியாக பயணிப்போரிடமே, வெலிப்பன்ன பிரதேசத்தில் வைத்து இவ்வாறு அதிக விலைக்கு இடியப்பம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. குறித்த விற்பனை நிலையத்தில் இடியப்பம் பெற்று உண்ட பின்பு பணம் செலுத்தும்போது, கூறப்பட்ட விலை விடயத்தில் அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இதேவேளை, பொதுவாக இடியப்பம் உண்ணச்செல்லும் யாரும் ஒரு இடியப்பம் என்ன விலை என்று முன்கூட்டியே Continue reading


Mahinda's-Secrete_tamilfast_Web

மகிந்த தொடர்பில் மக்களுக்கு தெரியாத ரகசியம் ஒன்று வெளியானது

மகிந்தவின் ரகசியம் ஒன்றை, ஹம்பாந்தோட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ளார். ஹம்பாந்தோட்ட துறைமுகம் அமைக்கப்பட்டதன் நோக்கம், சீன நிறுவனம் ஒன்றிற்கு தாரை வார்பதற்காகவே என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை நிர்மாணிக்கும்போதே, இந்த திட்டத்தினை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வகுத்துள்ளமை, சாதாரண பொதுமக்களுக்கு தெரியாத ரகசியம் என அவர் கூறியுள்ளார். இலங்கை சட்ட திட்டங்களுக்கு அமைவாக அரசினால் அமைக்கப்படும் துறைமுகம் ஒன்று, துறைமுக அதிகார சபையின் கீழ் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் ஹம்பாந்தோட்ட துறைமுகம் Continue reading


Wijayadasa-Rajapaksa

அமைச்சுப்பதவிக்கு மட்டுமே ஆசைப்படும் முஸ்லிம் அரசியல்வாதி ! யார் அவர் ?

அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொண்டால் மட்டும் போதும், முஸ்லிம்களின் மதம் மற்றும் இனம் என எந்தப் பிரச்சனையைப் பற்றிய அக்கறையும் இல்லாமல் செயற்பட்ட உங்களைப் போன்ற அரசியல்வாதிகள் எங்களைப்பற்றி விமர்சிக்கத் தகுதியற்றவர்கள் என, ராஜாங்க அமைச்சர் எம்.எல்.எ.எம் ஹிஸ்புல்லா விமர்சிக்கப்பட்டுள்ளார். நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவே, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா மீது இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். முஸ்லிம் இனத்தின் மீதான பாரிய பிரச்சனைகள் உருவாகி வருவதாகவும், அவற்றை கட்டுப்படுத்த, இலங்கையின் நீதித்துறை முறையான நடவைக்கைகளை மேற்கொள்ளவில்லை Continue reading


pic 2

வாகனத்தில் மோதி சிறுத்தை பலி

நேற்று மாலை ஹட்டன்- நுவரெலிய பிரதான பாதையில் மல்லியப்பு பிரதேசத்தில் வாகனம் ஒன்றில் மோதி சிறுத்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்த நிலையில், குறித்த சிறுத்தையின் சடலம் திடீரென காணாமல் போயுள்ளது. வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் இந்த சடலத்தை இனந்தெரியாத சில நபர்கள் கொண்டு சென்றுள்ளதாக நல்லதண்ணி வனவிலங்கு காரியாலயம் தெரிவித்துள்ளது. இதனால் உயிரிழந்த சிறுத்தையின் சடலத்தை தேடும் பணிகளை வனவிலங்கு அதிகாரிகள் ஆரம்பித்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை ஹட்டன் பொலிசார் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


pic 1

கண்டி மாணவர்களுக்கிடையே கைகலப்பு

கண்டி முன்னணி ஆண்கள் பாடசாலையின் முன்னால் அப்பாடசாலை மாணவன் ஒருவன் இனம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டது தொடர்பாக பொலிஸ் மற்றும் கல்வி அதிகாரிகள் தத்தமது தனிப்பட்ட விசாரணைகளை வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டாலும் இது தொடர்பாக எந்தவித புகார்களும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என கண்டி பொலிசார் தெரிவித்துள்ளனர். 13ஆம் ஆண்டு பயிலும் மாணவனை 12ஆம் ஆண்டு பயிலும் மாணவத் தலைவன் தலை முடியை வெட்டும்படி கூறியதே இந்தப் பிரச்சினைக்கு காரணம் என அப்பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார். Continue reading


Banned

ஹட்டனில் போக்குவரத்து தடை

ஹட்டன் வெளிஓயா பிரதான பாதையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இன்று அதிகாலையில்  பாதையோரமிருந்த மிகப் பழமையான மரம் ஒன்று வேரோடு முறிந்து வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக, ஹட்டன் வெளிஒயா புதுக்காடு மற்றும் ஆகரோயா  பகுதிக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது குறித்த மரம்  200 வருடங்கள் பழமையானது எனவும், மரத்தை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


unnamed (3)

திருகோணமலையில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

திருகோணமலைமாவட்டம் வில்கம் விஹார பகுதியில் வசித்து வரும் 15 குடும்பங்களைச்சேர்ந்த மக்கள், குடிப்பதற்குச் சுத்தமான குடிநீரைப் பெற்றுத்தருமாறு கோரி திருகோணமலை – ஹொரவபொத்தானை பிரதான வீதியை மறித்து இன்று திங்கட்கிழமை (24) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்தினால் குடிநீர் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய் போதாமையினால் குடிநீர் வழங்கும் திட்டம் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வில்கம் விஹார பகுதிக்கு, வெள்ளிக்கிழமை (21) வருகைதந்தபோது, குடிநீர் வழங்குவதாக ஜே.சி.பி இயந்திரத்தை வைத்துக்கொண்டு Continue reading


pro-end

போராட்டம் நிறைவு – அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு

யாழ் பலகலைக் கழக மாணவர்களின் படுகொலைக்கு நீதி வேண்டியும், அவர்கள் படுகொலையைக் கண்டித்தும் யாழ் பல்கலைக் கழக அனைத்து பீட மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. நண்பகல் 12 மணியளவில் போராட்டத்தை நிறைவுக்கு கொண்டு வந்த மாணவர்கள், தமது கோரிக்கைகள் அடங்கிய  மகஜரை யாழ் அரச அதிபர் வேதநாயகத்திடம்  ஒப்படைத்துள்ளனர். இன்று காலை முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டம் யாழ் – மாவட்ட செயலகம் முன்பாகவும் யாழ் – ஆளுநர் செயலகம் முன்பாகவும் முற்றுகையிட்ட மாணவர்களால் அமைதியான முறையில் Continue reading