01

றக்பி அணித்தலைவராக தனுஷ்க

மலேசியாவில் இடம்பெறும் போனியோ றக்பி போட்டியின் இலங்கை அணித்தலைவராக தனுஷ்க ரஞ்சன் தலைமை தாங்கவுள்ளார். இந்த போட்டியானது மலேசியாவில் இம்மாதம் 18ம் மற்றும் 19ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. முன்னாள் றக்பி அணியின் தலைவரான பசில் மரிஜாக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக அணியின் தலைவராக தனுஷ்க தலைமை தாங்கவுள்ளார். போனியோ றக்பி போட்டியில் பங்கேற்கும் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


1

இலங்கை- பங்களாதேஷ் டெஸ்ட் போட்டி இடைநிறுத்தம்

இலங்கை- பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. காலியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இன்றைய நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. போட்டியின் மூன்றாவது நாளான இன்று, இரண்டு விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களுடன் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி, சகல விக்கட்டுக்களையும் இழந்து 312 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்போது, பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர் முஷ்பிகுர் ரஹீம் 85 ஓட்டங்களையும், செளம்யா சர்கார் Continue reading


01

வீர வீராங்கனைகள் நேர்மையாக போட்டியில் பங்கேற்பதில்லை-மைக்கல்

போட்டிகளில் பங்கேற்கும் வீர வீராங்கனைகள் அனைவரும் நேர்மையாக பங்கேற்பதில்லை என, உலகின் முன்னணி நீச்சல் வீரரான, மைக்கல் பெல்ப்ஸ் தெரிவித்துள்ளார். போட்டிகளில் பங்கேற்கும் சக வீரர்கள் மோசடியான முறையில் போட்டியிடுவதாகவும், தன்னுடன் போட்டியிட்டவர்கள் அனைவரும் நேர்மையாக போட்டியிட்டார்கள் என தான் கருதவில்லை எனவும், மைக்கல் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க காங்கிரஸ் சபையினர் முன்னிலையில், ஊக்க மருந்துப் பயன்பாட்டு தடை குறித்து சாட்சியமளித்த போது அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.


Sri_Lanka_Cricket_

தரம் உயர்த்தப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான சீக்குகே பிரசன்ன மற்றும் அசேல அசேல குணரத்னவிற்கு இலங்கை இராணுவத்தில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மகாநாட்டில் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன இந்த பதவியுயர்வு குறித்து குறிப்பிட்டுள்ளார். சீக்குகே பிரசன்ன, இராணுவத்தின் வொரன்ட் அதிகாரி தரம் ஒன்றிலும், அசேல குணரத்ன, வொரன்ட் அதிகாரி தரம் இரண்டு பதவிலுமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.


Sri Lankan bowler Rangana Herath unsuccessfully appeals for a Leg Before Wicket (LBW) decision against Pakistan batsman Sarfraz Ahmed during the fourth day of the second cricket Test match between Pakistan andSri Lanka at the Dubai International Cricket Stadium in Dubai on January 11, 2014.  AFP PHOTO/Ishara S. KODIKARA

டெஸ்ட் அணியின் தலைவராக ரங்கன

இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். பங்ளாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில், இலங்கை அணியின் தலைவராக ரங்கன செயற்படவுள்ளார். இதேவேளை இடது கை சுழற்பந்து வீச்சாளர் மலிந்த புஸ்பகுமார அணியில் இணைந்து கொள்வார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. பங்ளாதேஷ் கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுத்தொடர் இரண்டு ரெஸ்ட் போட்டிகளை உள்ளடக்கியது. முதலாவது ரெஸ்ட் போட்டி எதிர்வரும் 7ம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


01477

காதலி புகைப்படத்தை நீக்கிய கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி சற்று நேரத்துக்கு முன்பு தனது காதலி அனுஷ்கா ஷர்மாவுடன் எடுத்த புகைப்படத்தை தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் பதிவேற்றியிருந்தார். குறித்த புகைப்படமானது விரைவாக வைரலாக தொடங்கியது. திடீரென்று குறித்த புகைப்படத்தை தனது முகப்புத்தகத்திலிருந்து கோலி நீக்கியுள்ளார். இவ்வாறு தனது முகப்புத்தக பக்கத்தில் புகைப்படங்களை பதிவேற்றிவிட்டு அதை நீக்குவது விராட் கோலியின் வழக்கமாகும்.


25

ரஷ்யாவின் பதக்கம் பறிமுதல்

லண்டனில் 2012ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 400 மீற்றர் அஞ்சலோட்டத்தில் ரஷ்ய பெண்கள் அணி வென்ற வெள்ளிப்பதக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. குறித்த போட்டியில் அன்டோனியா கிரிவோஷப்கா என்ற ரஷ்ய வீராங்கனை ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதால் ரஷ்ய அணிக்கு வழங்கப்பட்ட வெள்ளிப்பதக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 400 மீற்றர் அஞ்லோட்டத்தில் ரஷ்ய பெண்கள் அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. இந்த அணியில் இடம் பெற்று இருந்த 4 வீராங்கனைகளின் இரத்தம் மற்றும் Continue reading


IPL-tamilfast.lk

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான ஏல விற்பனை ஒத்தி வைப்பு

10 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான ஏல விற்பனை பெப்ரவரி மாதம் இறுதி வாரத்துக்கு ஓத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் 4 ஆம் திகதி பெங்களூரில் நடைபெறவிருந்தது. இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம் பெப்ரவரி 20 ஆம் திகதி அல்லது 25 ஆம் திகதி நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும் ஏப்ரல் 5 ஆம் திகதி ஐ.பி.எல். தொடர் Continue reading


253

தோல்விகண்ட இலங்கை

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையில் நேற்று டேர்பனில் இடம்பெற்ற 2 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி தென்னாபிரிக்க அணியை துடுப்பெடுத்துமாறு பணித்தது. 50 ஓவர் நிறைவில் தென்னாபிரிக்க அணி 6 விக்கட்டுக்களை இழந்து 307ஓட்டங்களை பெற்றிருந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கையணி 37.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 186 ஓட்டங்களை பெற்று தோல்விகண்டது. அந்த வகையில், ஐந்து போட்டிகள் கொண்ட தென்னாபிரிக்க சுற்றுப் Continue reading


921376_1016848558358748_911771885851235009_o

தமிழ் நாட்டின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரரான அபினவ் முகுந்த் டெஸ்ட் அணியில்

தமிழ் நாட்டின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரரான அபினவ் முகுந்த், இந்திய டெஸ்ட் குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார். இறுதியாக கடந்த 2011 ம் ஆண்டில் சர்வதேச போட்டியில் விளையாடி இருந்த அபினவ் முகுந்த் இந்தியா அணிக்காக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பங்களாதேஷ் அணிக்கெதிராக இந்தியாவில் நடைபெறவுள்ள ஒற்றைய டெஸ்ட் போட்டிக்கான குழாமிலேயே அவர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டி, பெப்ரவரி 9ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. அணி வீரர்கள் விபரம் : விராத் கோலி, முரளி Continue reading