isis tro

90 ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 90 ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகள் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உலகின் மிக சக்திவாய்ந்த வெடிகுண்டை கொண்டு அமெரிக்கா இத்தாக்குதலை நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தினை மையமாக கொண்டு அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நிகழ்த்தியது. இதனிடையே அமெரிக்காவின் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகள் எவ்வித உயிரிழப்போ நிகழவில்லை என ஐ.எஸ் அமைப்பின் தரப்பில் கூறப்பட்டிருந்தது.


0

இலங்கைக்கு செல்லாதீர்கள் கட்டார் அரசு

இலங்கைக்கு சுற்றுலா பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என கட்டார் நாட்டின் வௌிவிவகார அமைச்சினால், அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் பரவி வரும் H1N1 வைரஸ் நோய்த் தொற்றின் காரணமாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இலங்கையில் பெரும் தொகையானவர்கள் இந்த வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


1-6

பார்க் குவென் கைது

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் குவென் ஹை கைது செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 65 வயதான முன்னாள் ஜனாதிபதி, நீதிமன்ற உத்தரவின் படி கைது செய்யப்பட்டு, சியோலில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். குவென் ஹையின் நண்பியான சோய் சூன் சில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் ஜனாதிபதி குவென் ஹையுடனான நெருக்கத்தை வைத்து, ஊழல்களில் ஈடுபட்டதாகவும், அரசுப் பணி நியமனங்களில் தலையிட்டதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக Continue reading


japan

ஜப்பானில் பனிச்சரிவு: 8 பேர் பலி

ஜப்பானில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்குண்டு 8 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டோக்கியோவில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டோச்சிகி மாவட்டத்தில் அமைந்துள்ள பனி படர்ந்த மலையில், ஏறுவதற்காக பல்வேறு இடங்களைச்சேர்ந்த 60 மாணவர்கள் சென்றுள்ளனர். குறித்த மாணவர்கள் நாஸூ எனும் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த போது, திடீர் என பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 8 மாணவர்களின் சடலங்கள்  மீட்கப்பட்டுள்ளன. இதன்போது காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக நாஸு நகரில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி Continue reading


hu

சீன தங்கச்சுரங்கங்களில் விஷவாயு : 10பேர் பலி

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் லிங்காபோ நகரில் உள்ள குயின்லிங் தங்கச் சுரங்கத்தில் திடீரென கார்பன் மோனாக்சைட் விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த விஷவாயுவில் சிக்கி மூச்சுத் திணறி 8 தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை குயின்லிங் தங்கச் சுரங்கத்திற்கு அருகாமையில் உள்ள மற்றொரு சுரங்கத்திலும் இத்தகைய விஷவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன்போது குறித்த சுரங்கத்தில் பணியில் ஈடுபட்ட 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். சீனாவில் பல்வேறு நிலக்கரி மற்றும் தங்க சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்ற Continue reading


01

வடகொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வி

வடகொரியா நடத்திய புதிய ஏவுகணை சோதனை தோல்வியடைந்ததுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வடகொரியாவின் கல்மா எனும் இடத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த ஏவுகணை சோதனை பற்றி தென்கொரிய பாதுகாப்புத் துறை சார்பில், தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில், வடகொரியா ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தி இருந்தது. மேலும் நீண்ட தொலைவில் பாயும் ஏவுகணை சோதனைகளையும் நடத்தியது. இதற்கு ஐ.நா. சபையும் உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


11

வெள்ளை மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளை மாளிகைக்கு அருகே உள்ள சோதனை சாவடியில் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் காரில் வேகமாக வந்துள்ளார். இதன் போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மர்ம நபரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர் வெள்ளை மாளிகைக்கு வெடி குண்டு வைக்கபோவதாக தெரிவித்துள்ளார். இதன்காரணமாக வெள்ளை மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


gun 2

பிரான்ஸ் பாடசாலையில் துப்பாக்கி பிரயோகம் : இருவருக்கு காயம்

பிரான்ஸ் நாட்டின் தெற்கே உள்ள கிராசே (Grasse) எனும் ஊரில் உள்ள பாடசாலையில், மாணவர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். குறித்த மாணவரின் இந்தத் திடீர் தாக்குதலுக்கு என்ன காரணம் என்பது பற்றி இதுவரை எந்தத் தகவலும் வெளிவரவில்லை. இந்த சம்பவத்தில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும்,எவ்வித உயிரிழப்பு ஏற்படவில்லையெனவும் பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவரை பிரான்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


1

ஐஸ்வர்யா ராயின் தந்தை காலமானார்

பிரபல நடிகை மற்றும் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் கிருஷ்ணராஜ் ராய் உடல் நலக்குறைவால் மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த கிருஷ்ணராஜ் ராய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


013

பா.ஜ.க வேட்பாளராக கங்கை அமரன்

ஆர்.கே.நகர் தொகுதியில் பா.ஜ.க கட்சியின் வேட்பாளராக கங்கை அமரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அதிகாராபூர்வ அறிவிப்பை பா.ஜ.க தேர்தல் குழு செயலாளர் ஜே.பி.நட்டா டெல்லியில்அ றிவித்துள்ளார். இதேவேளை தேசிய அளவில் மிகப்பெரிய கட்சியான பா.ஜ.க தன்னை வேட்பாளராக அறிவித்தது மிக்க மகிழ்ச்சி எனவும், ஆர்.கே.நகர் மக்கள் பா.ஜ.கவை நிச்சயம் ஆதரிப்பார்கள் எனவும் கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.