0000

மலையகத்தில் கடும் மழை

மலையக பகுதிகளில் தற்பொழுது கடுமையான மழை பெய்வதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மேலும் மின்னல் செயற்பாடுகளும் மழையுடன் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.


Rain-10-300x183

மலையகத்தில் மழை

நாட்டின் பல இடங்களிலும் மழையுடன் கூடிய காலநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தெற்று மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்றைய தினம் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம். இடியுடன்கூடிய மழை பெய்யும்போது ஓரளவு கடும் காற்று வீசலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை கண்டி மாவட்டங்களில் தற்பொழுது காற்றுடன் கூடிய மழை பெய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.


01

மலையகத்தில் அதிக வெப்பநிலை

மலையகத்தில் அதிக வெப்ப நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக மலையகத்தில் உள்ள நீர் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்து காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த நிலையில் நீர் தேக்கங்களுக்குள் உள்ள கோவில்கள் மற்றும் விகாரைகளை பார்வையிடக் கூடிய நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


121

மலையகத்தில் A H1N 1 வைரஸ்

A H1N 1 வைரஸ் தாக்கத்திற்குள்ளான ஐந்து நோயாளர்கள் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக, கண்டி வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த வைரஸினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்றைய நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வருவதாகவும், வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் டாக்டர்  சமன் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். A H1N 1 வைரஸ் தாக்கத்தின் காரணமாக கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவர் திடீரென உயிரிழந்ததை அடுத்து, Continue reading